Monday 2 April 2012

ஆய்தம்

உலக மொழிகள் பலவற்றுள் ஹகர ஒலி வழக்கில் இருந்து வருகிறது. வடமொழியில் உள்ள 'ஹ' தமிழில் இல்லை என்றாலும் அதனினும் நுட்பமான ஒலியை ஆய்தம் தரவல்லது. ஆய்தம் என்றால் நுண்ணியது என்று பொருள்.இடனையும் பற்றுக்கோட்டினையும் கொண்டு சார்ந்து வரும் இயல்புடைய சார்பு எழுத்துக்களோடு ஒன்றாக தொல்காப்பியர் ஆய்தத்தைக் குறிப்பிடுகின்றார்.
மேலும்

'நலிவு வண்ணம் பெறும்' 

என்று இதன் இயல்பையும்

“முப்பாற் புள்ளி பெறும்“

என்று அதன் வரிவடிவத்தையும் விளக்கிச் செல்கிறார். ஆய்தம் உயிர் எழுத்து வரிசையில் சேர்க்கப்பட்டப் போதிலும் உயிரா? மெய்யா? என்ற ஐயமும் கருத்து வேறுபாடும் இலக்கண வல்லுநர்களிடையே காணலாம்.

                      தொல்காப்பியர் சார்பெழுத்து என்று மட்டும் கூறிச்சென்றாரெ ஒழிய உயிரா? மெய்யா? என்பதை விளக்கவில்லை.

                     புத்த மதத்தினர் வீரசோழியம் சந்திப்டலம் முதல் காரிகையில் நடு ஆய்தம் என கூறிச் செல்கிறார். அதற்கு உரைகூறும் பெருந்தேவனாரும் இதனை 

'உயிருக்கும் மெய்யுக்கும் நடுவாம் தன்னையாகி அஃகேனம்'

என்னும் தனிநிலை எழுத்து என்கிறார். எனவே புத்த மதத்தினர் காலத்தில் இஃது உயிருக்கும் மெய்யுக்கும் இடைப்பட்ட நடு ஒலியாக கருதப்பட்டு வந்தது என்பது தெளிவு. எனினும் இளம்பூரணர் மெய்யொலியாகவே கருதுகிறார். ஆய்த ஒலியின் இயல்பு பற்றி பேராசிரியர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் ஆராயந்து உள்ளார். அவர் தொல் காலத்திற்கு முன்னால் இடையொலியாகள் உரசொலிகளாக மென்மைப்படுத்தும் தன்மை உள்ளதால் நலிபு வண்ணம் பெறுமென்று தொல்காப்பியர் குறிப்பிட்டார் என்கிறார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...