Tuesday 5 March 2013

காதல் செய்யாதவர்கள் கல்லெறியுங்கள்

காதல் செய்யாதவர்கள் கல்லெறியுங்கள், நெல்லைக்கண்ணன்
                தமிழ் என்றால் இனிமையானது; இசைமயமானது என்பதை தன் நாவன்மையால் உலகெங்கும் உரைத்துத் தமிழ்வாழத் தானும் வாழும் தமிழாளர் அய்யா நெல்லைக்கண்ணன். 
       கண்ணன் காதல் தெய்வம். வாழ்வை ஆடலும் பாடலுமாக கொண்டாடுபவை அவனது மயிலிறகும் புல்லாங்குழலும். அய்யா நெல்லைக்கண்ணனின் கவிதைகள் இங்கே காதலைக் கொண்டாடுகின்றன.



எண்ணும் பொழுதெல்லாம் - அவன்கை
இட்டவிடத்தினிலே
தண்ணென் றிருந்ததடீ ; புதிதோர்
சாந்தி பிறந்ததடீ
பாரதியின் இந்தக் காதல் வரிகள் நெல்லைக் கண்ணன் கவிதைகளுக்கும் பொருந்தி வருகிறது.
பழனிபாரதி

மற்ற
மொழிகளால்
உன்னை
எழுத
முடியாது

தமிழுக்கு
மட்டுமே
காதல்
சரியாகத்
தெரியும்...

--------------------------------

உன்னைப்
பார்த்ததனாலேயே
வளர்ந்தும்
தேய்ந்தும்
சந்திரன்
ஆடிப்
போய்
விடுகின்றான்...

---------------------------------------
உன்
குலவை
ஒலிக்காகவே
பானைகள்
பொங்குகின்றன...

----------------------------------------
நிலவுக்கு
பெருமை
தாங்க
முடியவில்லை

நீ
நிலாச் சோறு
உண்பதால்...

----------------------------
உன்னை
எந்த
நோயும்
பிடித்துக்
கொள்ள
நான்
அனுமதிக்காத
காரணம்

உன்னை
ரொம்பவே
பிடித்துப்
போய்
உன்னை
விட்டு
அவை
போக
மறுக்கும்
என்பதால்...
--------------------------------------
இதுபோன்று அழகான கவிதைகளால் காதலைத் தாலாட்டியிருக்கிறார். இவரது ஒவ்வொரு சொல்லும் கவித்துவமானவை என்பதற்கு இந்த சிறிய புத்தகம் சான்று படித்து மகிழுங்கள்...

 

1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...