Sunday 28 July 2013

பாலம்” கல்யாணசுந்தரம்

போற்றுவோம் பூச்செண்டால்..
(ஜி. வைத்தியநாதன் மின் அஞ்சல் செய்தியின் அடிப்படையில்)
“பாலம்” கல்யாணசுந்தரம்பெயர்: - பி. கல்யாண சுந்தரம் - “பாலம்” சமூக நலப் பணிக்கு அவர் உருவாக்கிய நிறுவனம்.
பிறப்பு - ஆகஸ்ட், 1953 - மேலக்கரிவலக்குளம், திருநெல்வேலி.
குடும்பம்: பிரம்மசாரி. 

சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர். தாயாரின் அரவணைப்பில் வளர்ந்தவர். தாய் தான் தமது தயாள குணத்திற்கு ஆசான் என்று தாயாரை ஆராதிப்பவர். தமது உடலையும் கண்களையும் தானமாக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரிக்கு அர்ப்பணித்துள்ளார்.


படிப்பு: கோல்ட் மெடலிஸ்ட் லைப்ரரி சயன்ஸ் பட்டம். லைப்ரரியைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை மூலம் மதுரை காமராஜர் பல்கலைக் கழக முனைவர் பட்டம்.

வேலை: 35 வருடங்களாக குமரகுருபர கலைக் கல்லூரி, ஸ்ரீவைகுண்டத்தில் லைப்ரரியன்.
வேலையில் திறமை: லைப்ரரியில் புத்தகங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் எளிய உத்தியை கண்டு பிடித்துள்ளார்.

இமயமலை அளவு அவரது சிறப்பு அம்சங்கள்:

·         தமது சம்பளம் முழுவதையும் - ஆமாம் முழுவதையும் தான் - சமூக சேவைக்காக 35 வருடங்களாக தொடர்ந்து செய்து வந்தவர். தமது சொந்தச் செலவுக்குக் கூட தமது சம்பளத்தில் எந்த பகுதியையும் ஒதுக்காமல், முழுவதையும் சமூக சேவைக்காக அளித்தவர். தமது சொந்த செலவுக்கு, ஆபீஸ் வேலை முடிந்த பிறகு, ஹோட்டலில் சர்வர் பணி புரிந்த உத்தமர்.
·         பணி ஓய்வின் போது கிடைத்த ரூபாய் 10 லட்சத்தையும் சமூகப் பணிக்கு அளித்தவர்.
·         தமது பூர்வீக வீட்டையும் தானமாக கொடுத்த தர்மவான்.

·         “பாலம்” என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். புயல் நிவாரண நிதியை மக்களிடம் பெற்று, அரசாங்கத்திடம் அளித்து, சேவை செய்கிறது அவரது அந்த நிறுவனம். எல்லை தாண்டியும் அது பணி ஆற்றுகிறது - ஆந்திரா, ஒரிசா, குஜராத் என்று “பாலம்” பாரத தேசத்தின் பல இடங்களிலும்  உதவுகிறது.

·         இந்தியா - சைனா யுத்தத்திற்கு காமராஜரிடம் தமது தங்கச் சங்கலியை தேசிய நிதிக்கு அளித்தவர்.
·         வேலையில் சேருவதற்கு முன்பு, விகடன் காரியாலத்திற்குச் சென்று, விகடன் ஆசிரியர் திரு. பாலசுப்பிரமணியனைப் பார்த்து, தம்மைப் பற்றி எழுத வேண்டினார். அவரைப் பார்த்து பால சுப்பிரமணியன், “நீங்கள் சம்பாதித்து, அதை சேவைக்கு அர்ப்பணித்து விட்டு வாருங்கள்’ என்று விரட்டி அடிக்கப்பட்டார். ஆனால், இதையே ஒரு உபதேசமாகக் கொண்டு. தொண்டு செய்யும் விதையை தம் உள்ளத்தில் ஊன்றி, வளர்த்துக் கொண்டார்.

·         தாம் கதர் உடுத்த ஆரம்பித்த காரணத்தை அவர் கூறக் கேட்போம்: “எளிமையையும், காந்தீயம் பற்றியும் உரையாற்ற கல்லூரிகளுக்குச் சென்றுள்ளேன். மில் உடைகளுடன் எளிமையையும், காந்தியத்தையும் பற்றிப் பேசுவது என் மனத்தை உறுத்தியது. உடனேயே காதிக்கு மாறி விட்டேன்.”

·         “பாலம்” கல்யாணசுந்தரத்தின் தியாகத்தை அறிந்த சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இவரை தமது தந்தையாக தத்தெடுத்துக் கொண்டார்.

“பாலம்” கல்யாணசுந்தரத்திற்குக் கிடைத்த பாராட்டுக்களின் பட்டியல்:

·         வேலையில் கிடைத்த சம்பாத்தியம் அனைத்தையும் சமூகப் பணிகளுக்கு அன்பளிப்பாக அளித்த உலகத்திலேயே முதல் நபர் என்ற தகுதிக்காக அமெரிக்க அரசாங்கம் “லட்சத்தில் ஒரு லட்சிய மனிதர்” - “விணீஸீ ஷீயீ tலீமீ விவீறீறீமீஸீவீuனீ” -  என்ற பட்டத்தை அளித்துக் கௌரவித்தது. அவர்கள் அளித்த ரூபாய் 30 கோடிகளையும் அப்படியே சமூகப் பணிக்கு அளித்து விட்டார்.

·         நமது இந்திய அரசாங்கம் - “இந்தியாவின் சிறந்த லைப்ரரியன்” என்ற பட்டத்தை அளித்தது.
·         “உலகத்து சிறந்த 10 லைப்ரரியன்களில் ஒருவர்” என்ற புகழ் பெற்றார்.

·         உலக பயோக்கிராஃபிகல் மையம், கேம்பிரிஜ் - உலகத்தின் சிறந்த மனிதாபிமானி - என்று கௌரவித்தது.

·         ஐக்கிய நாட்டுச் சபை “20-ம் நூற்றாண்டின் சிறந்த மனிதர்” என்று தேர்வு செய்து, பாராட்டியது.
·         அமெரிக்க ஸ்தாபனம் ஒன்றும் - “லட்சத்தில் ஒருவர்” - என்ற பட்டம் கொடுத்துள்ளது.

அவர் சொல்லும் அறிவுரை:

“ஏதோ ஒரு விதத்தில், நாம் ஒவ்வொருவரும் சமூகத்திற்கு உதவினால் தான், சமூகத்தை நீடித்து நீண்ட நாள் முன்னேற்றமடையச் செய்ய முடியும். யாரோ ஒருவர் ஒரு சிறிய அளவு சமூக சேவை செய்தாலும், சமூக மாற்றம் ஏற்படும் என்பது தான் எனது அசைக்க முடியாத நம்பிக்கை.”

அவரது நீண்ட காலத்திட்டங்கள்:

·         அனைவருக்கும் பயன்படும் தேசிய மின் லைப்ரரி அமைத்தல்.
·         அந்நிய நிதி பெற்று அகில உலக குழந்தைகளுக்கான பல்கலைக் கழகம் அமைத்தல்.

அவரது அழ்ந்து சிந்திக்க வைக்கும் பொன் மொழி: சரியான நபர் அமைந்தால் தான், எந்தக் காரியமும் சிறப்பாக நடக்கும்.
வீரம், செல்வம், கல்வி - என்ற அனைத்து வரங்களையும் அருளும் பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகியவர்களை விசேஷமாக ஆராதித்து வணங்கும் இந்த நவராத்திரி நல்நாளில் மனிதரில் மாணிக்கமாகத் திகழும் “பாலம்” கல்யாணசுந்திரத்தை வாய்மை பூச்செண்டு கொடுத்து வாசகர்களின் அனைவரின் சார்பில் பாராட்டுகிறது.
ஆதாரம் இந்து பத்திரிகைச் செய்தி

1 comment:

  1. வணக்கம் !
    நல்ல பதிவு இப்படிப்பட்ட மனிதரை அறிமுகம் செய்து வைத்தமைக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வலிச்சரம் ஊடக வந்தேன். தங்கள் தளம் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...