Monday 30 April 2012

கேள்விக்குறியாகும் இந்திய வாழ்வாதாரம்

பி.சாய்நாத்
-----------------
சமநிலைச் சமுதயம் மாத இதழ்
--------------------------------------------
தொகுப்பு - பி.பி.ராஜலட்சுமி
தமிழில் - டாக்டர் மு.அப்துல் ரசாக் 
--------------------------------------------------------
சென்ற முறை வெறும் 38 நாட்கள் மட்டும் இந்திய நாடாளுமன்றம் நடந்தது. அந்த 38 நாட்களில் இந்தியர் வாழ்வும் வாழ்வாதாரமும் விவாதிக்கப்படுமானால் 1738 இந்திய விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். அதாவது தினமும் 47 பேர். ஒவ்வொரு அரை மணி நேரத்திலும் ஒருவர். தினமும் 10 முதல் 12 பேர் வரை தற்கொலைக்கு முயன்று தோற்றுப்போயுள்ளனர். இந்த 38 நாட்களி் 4000 முதல் 5000 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் இறந்துள்ளன.
அந்த 38 நாட்களி் இந்திய அரசு இலட்சக்கணக்கான ரூபாய் கஸ்டம்ஸ் எக்சைஸ் (சுங்கவரிகள்) தள்ளுபடி செய்துள்ளது. அந்த 38 நாட்களில் பிரபுல் பட்டேல் 19 மில்லியன் ரூபாய் தனது சம்பாத்தியத்தில் சேர்த்துள்ளார். கோடீஸ்வர்களின் உலகின் நான்காவது இடத்தில் உள்ள நம் நாட்டில் சாதாரண மனிதரின் வாழ்க்கைச் செலவு வெறும் 20 ரூபாய்தான்.
-------------------------------------------------------------------------------------------------

விவசாயிகள் என்ன கேட்கிறார்கள் தெரியுமா? “எங்களை ஏன் விவசாயி என்றழைக்கின்றீர்கள்“ நாங்கள் எதை கட்டுப்படுத்துகிறோம்? விதையை? இல்லை. அதை ஏதோ ஒரு நிறுவனம் செய்கிறது. பூச்சிக்கொல்லி மருந்தையா? இல்லை. அதை மூன்று நிறுவனங்கள் கட்டுப்படுத்துகின்றன. உரம்? நான்கு நிறுவனங்கள் அதைத் தீர்மானிக்கின்றன. விவசாயிகள் கையில் இப்போது இருப்பது நிலம் மட்டும்தான். அது கூட திட்டங்கள் என்ற பெயரில் கையகப்படுத்துப்படுகின்றன. இந்நிலையில் நாங்கள் என்னதான் செய்வது.

தினமும் இந்தியாவில் 200 பேர் விவசாயத்தைக் கைவிடுகிறார்கள். வயதானோர் மற்றும் குழந்தைகளைத் தவிர்த்து கிராமங்கள் சூன்யமாகின்றன. சிறு குழந்தைகளை வயதானவர்களிடம் ஒப்படைத்துவிட்டு பெற்றோர் எந்த வேலையும் செய்யவும் தயாராகி சென்றுவிடுகிறார்கள்.

அமைப்பு சாரா துறைகள் குறித்து ஏராளமாக எழுதப்படுகிறது. அமைப்பு சாரா துறைகளில் தொழிலாளர்கள்கள் மட்டும் ஒன்றிணைய முடியாமல் இருக்கிறார்கள். தார்கண்டில் இருந்து தில்லிக்கு வருகிற பெண் பணியாளர்களுக்கு அமைப்பு இல்லை. ஆனால் அவர்களை அழைத்துவரும் முகவர்களுக்கு அமைப்பு உண்டு. பெண்களை எங்கிருந்து எப்படி திரட்ட வேண்டும் என்கிற ஐடியா உண்டு. எந்த கிராமத்தில் மனிதவளம் தேடவேண்டும் என்பதை அமைப்பு சார்ந்த முகவர்கள் தெரிந்துவைத்திருக்கிறார்கள்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...