Wednesday, 30 November 2011

பொன்மொழிகள் 1

நாம் அமைதியாக இருந்தால் தெய்வங்கள் மெதுவாக பேசுவதைக்கூட கேட்கலாம்

அமைதியாய் இருப்பவர்களுக்கு அமைதி மறுக்கப்படுவதில்லை

இன்பத்தின் இரகசியம் நீங்கள் விரும்புவதை செய்வதில் அல்ல...
நீங்கள் செய்வதை பிறர் விரும்புவதில் இருக்கிறது...

எல்லோருடைய இடத்தையும் தாய் வகிக்க முடியும்... தாயின் இடத்தை யாரலும் வகிக்க முடியாது...

சாக்கு கூறும் ஆற்றல் பெற்றவன். சாதனை எதுவும் செய்வதற்கு தகுதியற்றவன்...

நம்மை நாமே மௌனாய் அடக்கி ஆள்வதிலிருந்து உண்மையான சிறப்பு பிறக்கிறது...

இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறாயோ அதைப் பற்றி மட்டுமே நினைக்க வேண்டும்...

வெற்றி தோல்விகளைப் பற்றி கவலைப் படாதே... கடமையை செய்து வா...

உன் தகுதி பிறருக்கு தெரிய வேண்டுமானால் பிறர் தகுதியை நீ அறிந்துக் கொள்...

எதற்கும் தயாராய் இருப்பவனைத் தேடித்தான் வாய்ப்புகள் வரும்... -சிஸரோ

அழகென்பது செயலில் தான் இருக்கிறது... அதைத் தவிர வேறு அழகில்லை. - கோலியர்

அமைதியிலும் அசையா உறுதியிலும் உன் வலிமை இருக்கிறது - ஏஸியா

தைரியமாக தன்னை அறிந்துக் கொண்டு செயல்படுபவர்களை இந்த உலகம் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க காத்திருக்கிறது...  - ஜோர்பான் டி.எஸ்

மனசாட்சியை தெளிவாக வைத்திருக்கிறீர்களா? பிறகு ஏன் பயப்படுகீறீர்கள் -பெஞ்சமின் ஃபிராங்ளின்

முட்டாள்களின் தோழமையை விட ஒருவன் தனியாக வாழ்வது எவ்வளவோ மேல்... - புத்தர்

கீழ்படிய முடியாதவன் தலைமை தாங்க முடியாது

ஆணுக்கு போர் எப்படியோ அப்படி பெண்ணுக்கு பிரசவம்...

முட்டாள்கள் கடைசியாய் செய்வதை அறிவாளி முதலில் செய்கிறான்....





0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...